search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது ரிஸ்வான்"

    டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்லின் 6 ஆண்டு கால சாதனையை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முறியடித்துள்ளார்.
    சார்ஜா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆடத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன் எடுத்தார்.

    இதில் 5-வது ரன்னை எடுத்தபோது ரிஸ்வான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.

    20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் கிறிஸ்கெய்ல். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 2015-ம் ஆண்டு 36 ஆட்டத்தில் 1,665 ரன் எடுத்தார். சராசரி 59.46 ஆகும். இதில் 3 சதமும், 10 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 151 ரன் (அவுட் இல்லை) குவித்தார்.

    கிறிஸ்கெய்லின் 6 ஆண்டு கால சாதனையை தான் முகமது ரிஸ்வான் முறியடித்தார். அவர் 1,676 எடுத்துள்ளார். ஒரு சதமும், 15 அரை சதமும் இந்த ஆண்டில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் குவித்தார். அவருக்கு இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    இதனால் இந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அவரது ரன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 79 ரன் எடுத்தார்.

    மேலும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கும் இந்த ஆட்டத்தில் சாதனை படைத்தார். அவர் 18 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரை சதத்தை தொட்டார். இந்த உலக கோப்பையில் ஏற்கனவே இந்திய வீரர் ராகுல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 18 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 2014-ம் ஆண்டு 18 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

    இந்த 3 பேரும் 20 ஓவர் உலக கோப்பையில் அதிவேகத்தில் அரைசதம் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில் உள்ளனர். யுவராஜ்சிங் 2007 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்தில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருக்கிறது.
    ×